அரூர் திமுக சார்பில் தந்தை பெரியாரின் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு அரூர் நகர செயலாளர் முல்லைரவி தலைமையில் பெரியாரின் உறுவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார், சா.ராஜேந்திரன், பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால், முன்னாள் எம்எல்ஏவும் வடக்கு ஒன்றிய செயலாளருமான ஆர்.வேடம்மாள், கோ.சந்திரமோகன், வே.சௌந்தரராசு, நிர்வாகிகள் கோட்டிஸ்வரன், தமிழழகன், குமரன், கணேசன், சுரேஷ்பாபு, மாதேஸ்வரன், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


