Type Here to Get Search Results !

அரூர் ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளுக்கு அடுத்த மாதம் 25ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் இருக்காது - கோட்ட நிர்வாக பொறியாளர் தகவல்.


தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், திட்ட பராமரிப்பு கோட்டம், தருமபுரி கீழ் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத்தில் உள்ள 5 ஊராட்சிகளுக்கு (பெரியப்பட்டி, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, பைரநாய்க்கன்பட்டி மற்றும் சிட்லிங் தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 

தற்போது தீர்த்தமலை அருகில் மாநில சாலை (SH6A) விரிவாக்க பணிகளுக்காக நெடுஞ்சாலைத் துறை மூலம் 250 mm DI குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இடையில் பாறைகள் வந்ததால் பணிகள் முடிவடையவில்லை. எனவே 25.122023 வரை ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.


எனவே மேற்கண்ட பகுதிகளில் உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்திக்கொள்ளவும். பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தருமபுரி திட்ட பராமரிப்பு கோட்ட நிர்வாக பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies