Type Here to Get Search Results !

பாலக்கோடு பஸ் நிலையத்தின் உள்ளே அனுமதி இன்றி நிறுத்தியிருந்த 15 ஆட்டோக்களுக்கு அபராதம் .போக்குவரத்து போலீசார் அதிரடி.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் மூன்று சக்கர ஆட்டோக்களை  தாறுமாறாக ஓட்டி வருவதால் பேருந்து வருவதற்க்கும், பயணிகளுக்கும்  பெரும் சிரமம் ஏற்பட்டு வந்ததையடுத்து, பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து அவர்கள்  பேருந்து நிலையத்திற்க்குள் மூன்று சக்கர வாகனம், இரண்டு சக்கரவாகனம், தள்ளுவண்டி ஆகியவை செல்லவும், நிறுத்தி வைக்கவும் தடை விதித்திருந்தார்.

ஆனால் உத்தரவை மீறி தொடர்ந்து பேருந்து நிலையத்திற்க்குள் ஆட்டோக்கள் சென்று வந்தால் பாலக்கோடு டிராபிக் எஸ்.ஐ.கண்னன் மற்றும் போலீசார் இன்று அதிரடியாக பேருந்து நிலையத்திற்க்குள் சென்று போக்குவரத்திற்க்கு இடையூறாக இயக்கப்பட்ட 15 ஆட்டோக்களுக்கு தலா 500 ரூபாய் வீதம் 7500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies