Type Here to Get Search Results !

பாலக்கோடு வட்டார விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை (NCC) பெற வேண்டுகோள்.


பாலக்கோடு வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை உரிய நேரத்தில் பெற விவசாய கடன் அட்டை (KCC) அவசியமாகிறது. விவசாயிகள் கடன் அட்டை வணிக வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் நில உடைமை அடிப்படையில் பிணையம் இல்லா கடனாக ரூபாய் ஒரு லட்சத்து 6 ஆயிரம் வரை பெறலாம். 

அசலுடன் வட்டியை சரியாக செலுத்தும் விவசாயிகளுக்கு மூன்று சதவீத வட்டி (3%) தொகை ஊக்கத்தொகையாக விவசாயிகள் வங்கி கணக்குக்கு வரவு வைக்கப்படும். விவசாயிகள் இந்த கடன் அட்டையை ஐந்து வருடம் வரை பயன்படுத்தலாம். ஐந்து வருடத்திற்கு மேல் விவசாயிகள் மீண்டும் கடன் அட்டையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். மேற்கண்ட விவசாய கடன் அட்டை வேளாண்மை பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். 


இத்திட்டத்தில் சேர விவசாயிகள் தங்களது கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு எண்கள் மற்றும் விண்ணப்ப படிவம் ஆகிய ஆவணங்களை பாலக்கோடு செயல்பபட்டு வரும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களிடம் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை பாலக்கோடு வேளாண்மை உதவி இயக்குநர் திரு. பா.அருள்மணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies