Type Here to Get Search Results !

மாட்லாம்பட்டி அருகே சொகுசு கார் விபத்து: முறிந்தது தென்னை மரம்


சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாட்லாம்பட்டி என்ற இடத்தில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியிருக்கிறது.


பெங்களூரிலிருந்து சேலம் நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது, திடிரென ஆக்சில் சென்டர் ஜாய்ன்ட் துண்டானதால், கட்பாட் டை இழந்த கார் சாலையோரம் வயல் வெளியிலிருந்த தென்னை மரத்தின் மீது மோதியதில், தென்னை மரமே அடியோடு முறிந்து விழுந்தது.


காரில் இருந்தவர்கள் சேலத்தை சேர்ந்த சரவணன் மற்றும் அவரது மனைவி யோகப்பிரியா என்பதும், ஸ்டுடியோ தொழில் செய்து வருவதாகவும், பெங்களூருக்கு சென்றுவிட்டு காரில் ஊர் திரும்பியபோது விபத்து நடந்திருக்கிறது.


விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடந்து முடிந்துள்ள இந்த பயங்கர விபத்தில் கணவன் மனைவி இருவரும் லேசான காயங்களுடன், நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies