Type Here to Get Search Results !

காடுசெட்டிபட்டியில் பெட்டி கடையில் குட்கா விற்றவர் கைது.


தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த காடுசெட்டிபட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுவதாக பஞ்சப்பள்ளி போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பஞ்சப்பள்ளி  அடுத்துள்ள காடுசெட்டிபட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெட்டிகடையில் மறைத்து வைத்து தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 35 ) என்பது தெரிய வந்தது, அவரை கைது செய்த போலீசார் பெட்டி கடையில் மறைத்து வைத்திருந்த 400 ரூபாய் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies