Type Here to Get Search Results !

பாலக்கோட்டில், சத்துணவு திட்ட சமையலர் மற்றும் உதவியாளருக்கான புத்தாக்க பயிற்சி.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் அனுமதியுடன் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய பள்ளி சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு மைய சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.


பாலக்கோடு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) இந்துமதி வரவேற்புரையுடன், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன் தலைமையில் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.


நிகழ்வில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் சத்துணவு மையங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அதாவது பணியாளர்கள் தன் சுத்தம், சுற்றுப்புற சுத்தம் பராமரிப்புடன் சமையலறை, பொருள் இருப்பறை சுத்தம் மற்றும் தயாரிக்கக்கூடிய மூலப் பொருட்கள் மற்றும் தயாரித்த உணவுப் பொருட்கள் பராமரித்தல், வழங்குதல் மற்றும் உணவு மாதிரி எடுத்து வைத்தல் உள்ளிட்டவையுடன் எலி,கரப்பான்,பல்லி, பூச்சிகள்  அண்டாமல் தவிர்த்தல், உணவு பொருட்கள்  காலாவதி தன்மையை அறிதல் குறித்தும் மூலப்பொருட்கள் கொண்டு நேரடியாக செயல் விளக்கம் அளித்து  சத்துணவு  மையங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய பிரசுரங்களை வழங்கினார். 


தீயணைப்பு துறை சார்பாக மகேந்திரன் பங்கேற்று சிலிண்டர் மற்றும் கேஸ் அடுப்பு, ரெகுலேட்டர், டியூப் உள்ளிட்டவை உபயோகப்படுத்தல், பொருத்துதல், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துரைத்தார். 


பஞ்சப்பள்ளி ஆயுஸ் இயற்கை மற்றும் யோகா மருத்துவ அலுவலர் பிரித்திவிராஜ் உரையில் பணியில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உரித்தான யோகா பயிற்சிகளையும்  போக்குவதற்கான வழிமுறைகளை நமக்கு நாமே டாக்டர்கள் என ஒரு சில பயிற்சிகளை நேரடியாக செய்தும் செய்ய சொல்லியும், பயிற்சி அளித்து தினந்தோறும் பின்பற்றுதல் அவசியம் என்றதுடன் பணியின் போது உடலின் ஐம்புலன்களையும் ஒருங்கிணைத்து கவனமாக பணியாற்றுதல் அவசியம் மேலும்  உடல் நலன் பேண தினந்தோறும் நடை பயிற்சி 10 நிமிடம் அவசியம் என எடுத்துரைத்தார். 


பாலக்கோடு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா சத்துணவு மையங்களில் சமைக்கும் உணவினை பரிமாறும் போது மாணவ, மாணவியர்களிடம் இன்முகத்துடன் கனிவான முறையில் வழங்கி அவர்களுக்குள்ள நெருக்கத்தை அதிகப்படுத்தி தாயன்போடு பரிமாற கேட்டுக்கொண்டார். 


வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன் மையங்களில் ஏதும் குறைபாடுகள் இருந்தால் உடனுக்குடன் துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் உணவு வழங்குதல் குறித்து எவ்விதமான இடர்பாடும் ஏற்படாமல் செயல்பட வலியுறுத்தினார். 


பயிற்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு மணிமேகலை இப்பயிற்சியில் உள்வாங்கிய கருத்துக்களை செயல்படுத்தி மாவட்டத்தில் சத்துணவு திட்டம் சிறப்பான நிலையை எய்திடவும் பள்ளி வளாகங்களில் காய்கறிதோட்டம் அமைத்து பராமரிக்கவும் முடியும் பட்சத்தில் தினம் தோறும் உணவில் ஒரு கைப்பிடி அளவு முருங்கை கீரை  சேர்த்து  பரிமாறவும், அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற கேட்டுக் கொண்டார். 


பயிற்சியில் ஒன்றியத்துக்கு 50 பேர் என மொத்தம் 100 நபர்கள்  மற்றும்  வட்டார வளர்ச்சி சத்துணவு பிரிவு உதவியாளர் முருகேசன், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து குழந்தைகள் வளர்ச்சி மேற்பார்வையாளர்கள் புனிதா மற்றும் கலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


இறுதியாக காரிமங்கலம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்துணவு முருகேசன் நன்றியுரை ஆற்றினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884