தருமபுரி மாவட்ட அளவில் மாணவிகளுக்கான கையுந்து பந்து போட்டி தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்றது, இப்போட்டியில் ஆர்.கோபிநாதம்பட்டி அரசு பள்ளி மாணவிகள் சிறப்பாக விளையாடி இரண்டாமிடம் பெற்றனர்.
மாணவிகளுக்கு பயிற்சி அளித்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மூ.சிவக்குமார் மற்றும் மாணவிகளை முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துகுமார் தலைமை ஆசிரியர் செல்வம் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

