Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளி இரயில்வே கேட் அருகே வழிப்பறி கும்பலை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார், 4 பேர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்.


மாரண்டஅள்ளி இரயில்வே கேட் அருகே வழிப்பறி கும்பலை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார், 4 பேர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்.


தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி இரயில்வே கேட் அருகே சந்தேகம். படும்படியாக மர்ம நபர்கள் சிலர் கையில் ஆயுதங்களுடன் இருப்பதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது,


இதையடுத்து மாரண்டஹள்ளி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம்  அறிவுரைப்படி  எஸ்.ஐ.ஜீவாணந்தம் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்க்கு சென்றனர், போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றவர்களை  மடக்கி பிடித்து விசாரனை செய்ததில், கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த மகேந்திரன் (வயது .24) மாரண்டஅள்ளியை அடுத்துள்ள கோவில்பட்டியை சேர்ந்த சூர்யா (வயது. 26), மாரண்டஅள்ளி புதுதெருவை சேர்ந்த வசந்த்(வயது.30), அமாணிமல்லாபுரத்தை சேர்ந்த ரமேஷ் (வயது. 28) என்பதும் அவ்வழியாக வருபவர்களிடம் கொள்ளையடிக்க திட்டம் போட்டு காத்திருந்ததும் தெரிய வந்தது,


இதையடுத்து  அவர்களிடமிருந்த சொகுசு கார், மோட்டார் சைக்கிள், 2 பட்டாகத்தி மற்றும் மிளகாய்பொடி பொட்டலங்ககளை பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.


மேலும் தப்பி ஓடி தலைமறைவான கோவில்பட்டியை சேர்ந்த மாதையனை என்பவரை  போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies