தமிழக முழுவதும் 2019 ஜனவரி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது என்று தமிழக அரசு தடை விதித்து உத்தவிட்டுள்ளது.பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் மூலம் மஞ்சப்பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், தண்ணீர் டம்ளர், தட்டு உள்ளிட்டவைகள் சர்வ சாதாரணமாக அனைத்து கடைகளிலும் கிடைப்பதால் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.
பேரூராட்சி நிர்வாகம் பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துகிறேன் என்ற பெயரில் பெயரளவில் மட்டுமே வணிக நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகளிடம் சொற்ப அளவில் பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுப்பது போல் பாவ்லா செய்து வருகின்றனர்.விழிப்புணர்வு என்ற பெயரில் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் விளம்பரத்திற்காக பேரூராட்சி சார்பில் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

