தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனியப்பன் (37) இவருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்க்கு இன்று காலை சென்றவர், விவசாய நிலத்தில் சுமார் 13-அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தார், இதைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடனடியாக பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜிக்கு தகவல் தெரிவித்தனர்.
அவரது உத்தரவின் பேரில் விரைந்து வந்த பாலக்கோடு வனத்துறையினர் மலைப்பாம்பை இலாவகமாக உயிருடன் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர்.
அவ்வப்போது இறை தேடி கிராமங்களுக்குள் மலைப்பாம்புகள், காட்டு பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் வருவதால் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

