Type Here to Get Search Results !

மொரப்பூர், கடத்தூர் ஒன்றியங்களில் தீபாவளி இனிப்பு காரம் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு.


தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர்  அவர்கள் வழிகாட்டல் படி, மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு இடங்கள், விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகளில் இனிப்பு காரங்கள் உரிய முறையில் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறதா மூலப்பொருட்கள், சமையல் எண்ணெய், பயன்படுத்தப்படும்  குடிநீர் மற்றும் பணியாளர்கள் தன் சுத்தம்,சுற்றுப்புற சுகாதாரம் கடைபிடிக்கப்படுகிறதா என கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்க்கொள்ள  உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுருந்தார். அதன் பொருட்டு கடந்த சில தினங்களாக மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


நேற்றைய தினம் கடத்தூர் , ஒடசல்பட்டி மற்றும் மொரப்பூர் பகுதிகளில் உள்ள இனிப்பு, காரம் தயாரிக்கும் இடங்கள், பேக்கரிகள் மற்றும் விற்பனை நிலையங்களில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் பொறுப்பு  நந்தகோபால் ஆய்வு செய்தார். ஆய்வில் ஒரு சில இனிப்பு காரம் தயாரிப்பு இடங்களில் இருந்து செயற்கை நிறமூட்டிகள்  ஏற்றப்பட்ட வருத்த பச்சை பட்டாணி, வறுத்த நிலக்கடலை, பிங்கர் சிப்ஸ் மற்றும் அளவுக்கு அதிகமாக நிறம் சேர்க்கப்பட்ட லட்டு, அல்வா உள்ளிட்டவை பறிமுதல் செய்து செய்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் ஒரு தயாரிப்பு இடத்தில் உரிய விவரம் இல்லாத மசாலா பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.


மூன்று கடைகளுக்கு தலா ஆயிரம் வீதம் உடனடி அபராதம் மாவட்ட நியமன அலுவலர் பரிந்துரை பேரில் விதிக்கப்பட்டது. கடத்தூரில்  ஓர் தயாரிப்பு, விற்பனை நிலையத்திற்கு அருகிலேயே வெளியேறும்  கழிவுநீர் முறையாக  வெளியேறாமல் தேங்கி சாலையில் ஓடி சுகாதாரம் குறைபாடு கண்டு கடை உரிமையாளரை  உடன் குறைபாடு களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் கடை செயல்பட தடை விதிக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டது.  


தயாரிப்பு கூடத்தில்  ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தி மீதமாகும் சமையல் எண்ணெயை உணவு பாதுகாப்புத் துறையின் அங்கீகரிக்கப்பட்ட மறு பயன்பாட்டுக்கு சமையல் எண்ணெய் ரூகோ டீலரிடம் அளித்து உரிய தொகை பெற்றுக் கொள்ள உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது. 


இனிப்பு, காரம் தரமறிய  இனிப்பு, கார வகைகள் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies