அப்போது வனப்பகுதியிலிருந்து இரண்டு காட்டு யானைகள் உணவு தேடி குள்ளப்பன் நிலத்தின் வழியாக சென்றன. நிலத்தில் விவசாய பணி செய்து கொண்டிருந்த -குள்ளப்பனை கண்ட இரண்டு காட்டு யானைகளில் ஒன்று திடிரென ஆக்ரோசமாகி குள்ளப்பனை தும்பிக்கையால் தாக்கியும், தொடையை தந்தந்தால் குத்தி கிழித்து விட்டு அங்கிருந்து சென்றது. இதில் குள்ளப்பன் பலத்த காயமடைந்து மயக்கமடைந்தார்,
அப்பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தவர்கள், இதனை கண்டு காயமடைந்த விவசாயி குள்ளப்பனை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விவசாயி குள்ளப்பன் யானையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

