Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ முத்து விநாயகர் திருக்கோவிலில், சுவாமி ஐயப்பன் உற்சவமூர்த்திக்கு இன்று அபிஷேக ஆராதனை பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.


பென்னாகரம் நகர, அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினரால், தெய்வத்திரு லட்சுமணன் குருசாமி அவர்களின் நினைவாக, கடந்த 35 ஆண்டுகளாக சுவாமி ஐயப்பன் உற்சவமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனை பூஜைகளும், அன்னதானமும் நடைபெற்று வருகிறது. 


அதனை தொடர்ந்து இன்று 36 ஆம் ஆண்டாக பென்னாகரம் நகர சங்க அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினரால், சுவாமி ஐயப்பன் உற்சவமூர்த்திக்கு பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலை முத்து விநாயகர் திருக்கோவிலில், அபிஷேக ஆராதனை பூஜைகள், வெகு விமர்சியாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது.


இந்நிகழ்ச்சியில்  அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தை சேர்ந்த தர்மபுரி மாவட்ட நிர்வாகிகளும், பென்னாகரம் நகர சங்க நிர்வாகிகளும், பென்னாகரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஐயப்பன் குருசாமிகளும், ஏராளமான ஐயப்ப பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies