Type Here to Get Search Results !

டெண்டர் நடத்துவதில் பல்வேறு முறைகேடுகள் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் மோதிக்கொண்ட ஒப்பந்ததாரர்கள் - திமுகவினர்.


டெண்டர் நடத்துவதில் பல்வேறு முறைகேடுகள் ஒப்பந்ததாரர்கள், அதிமுக துணை சேர்மன் மீது சரமாரி புகார், திட்டமிட்டு, டெண்டர்களை தனக்கு ஆதரவாளர்களுக்கு வழங்குவதாக வாக்குவாதம்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் ஒன்றியத்தில், அரசு பள்ளி கட்டிடங்களை சீரமைப்பது தொடர்பாக, 16 பணிகளுக்கு, சுமார் 56 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளுக்கான டெண்டர் இன்று விடப்பட்டது.


அந்த டெண்டரின் போது, சிலரின் பணுக்கள் திட்டமிட்டு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், பெரும்பாலான டெண்டர்களை ஒன்றிய குழு துணை தலைவர் (சேர்மன்) ஆக உள்ள அதிமுகவை சேர்ந்த தனபால், தனக்கு வேண்டியவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார் எனவும் கூறி, ஒப்பந்ததாரர்களும், திமுகவினரும், வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies