தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சாமனுர் காப்பு காட்டில் சிறுத்தை இருப்பதாக பாலக்கோடு வனத்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜ் மற்றும் வன துறையினர் சாமனுர் காப்பு காட்டிற்க்கு சென்று சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர்.
அதில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்த வனதுறையினர் .சிறுத்தை குட்டிகள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தையை பிடிக்க வனவர் தலைமையில் தனிக்குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
சிறுத்தை பிடிபடும் வரை பொதுமக்கள் யாரும் காப்புக் காட்டிற்க்கு செல்ல வேண்டாம் என்றும், கால்நடைகளை காப்பு காட்டில் மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என்றும், இரவு நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் சிறுத்தை நடமாட்டம் குறித்து தெரிய வந்தால் உடனடியாக பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வனசரக அலுவலர் நடராஜ் கேட்டு கொண்டார்.

