Type Here to Get Search Results !

BDO அலுவலகத்தில் டெண்டர் நடைபெறும் போது மின்வெட்டு, செல்போன் வெளிச்சத்தில் டெண்டர் நடைபெற்ற அவலம்.


பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா தலைமையில் 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், டெண்டர்கள் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். மாலை 7 மணிக்கு நடைபெற்றது. டெண்டர் துவங்கிய சிறிது நேரத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டது, இதனை தொடர்ந்து செல்போன் வெளிச்சத்தில் டெண்டர் பணிகள் நடைபெற்றது.


பென்னாகரம் ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக கடுமையான தொடர் மின்வெட்டு இருந்து வருகிறது, இதன் காரணமாக வர்த்தகர்களும் பொதுமக்களும் கடும் இன்னலுக்க ஆளாகி வரும் சூழ்நிலையில், டென்டரின் போது வட்டார வளர்ச்சி அலுவலகத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies