Type Here to Get Search Results !

ஏரியூர் அருகே 9 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த, மலையனூர் மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம். இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.


தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இராமகொண்ட அள்ளி ஊராட்சி, மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயம், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆலயம் ஆகும்.


சுற்றுவட்டார கிராமங்களான, இராமகொண்ட அள்ளி, புது நாகமரை, சோளப்பாடி உள்ளிட்ட 18 ஊர்களுக்கு தலைமை மாரியம்மனாக இந்த ஆலயம் உள்ளது. இன்நிலையில் பல்வேறு பிரச்சனை, வழக்கு உள்ளிட்ட காரணங்களால், சுமார் 9 ஆண்டுகளாக இந்த ஆலயம் பூஜைகள் செய்யப்படாமல், பூட்டப்பட்டிருந்தது. 


இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கியது. இதனை தொடர்ந்து நேற்று பம்பை மேளதாளங்கள் முடங்க, வானவேடிக்கையுடன், காவிரி தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. 

 அழகா கவுண்டனூரில் இருந்து புறப்பட்ட தீர்த்த குட ஊர்வலம், சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து, ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆலயத்தை அடைந்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு யாக பூஜைகள், யாக வேள்விகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை 9.15 மணிக்கு மகா கும்பாபிஷேக நிகழ்வு நடைபெற்றது.

 

விநாயகர் ஆலயம் ஸ்ரீ மஹா சக்தி மாரியம்மன் ஆலயம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய நவகிரகங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக நிகழ்வை நடத்தி வைத்தனர். இந்த கும்பாபிஷேக பூஜைகளை, இருபதுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் மேற்கொன்டனர். இந்த கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை, மலையனூர் ஊர் கவுண்டர்கள் மற்றும் விழா குழுவினர்கள் மேற்கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies