தருமபுரி மாவட்டம் பொம்மிடி இருப்புப் பாதை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி தண்டவாளத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்துகிடந்துள்ளார், பிரேதத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அவரை பற்றி விசாரித்ததில் தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் தருமபுரி இருப்புப்பாதை காவலர் தேவராஜ், மை தருமபுரி அமரர் சேவையின் மூலம் சமூக சேவகர் அருணாசலம், சதீஸ் குமார் ராஜா, அருண் பிரசாத் ஆகியோர் உதவியுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதுவரை மை தருமபுரி அமரர் சேவை மூலம் 69 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

