Type Here to Get Search Results !

பாப்பிரெட்டிப்பட்டி அருகே 65 வயதை தாண்டியும் ரேஷன் அட்டை இல்லாமல் இருக்கும் மலைவாழ் இன வயதான தம்பதியினர்.


பாப்பிரெட்டிப்பட்டி அருகே 65 வயதை தாண்டியும் ரேஷன் அட்டை இன்னும் வாங்க முடியாததால் ரேஷன் பொருள் வாங்காமல் அவதியுறும் மலைவாழ் இன வயதான தம்பதியினர் அவதியற்றி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டுக்கோணம்பட்டி பகுதியை சார்ந்தவர் மாரி வயது 62, இவரது மனைவி வெள்ளையம்மாள் 67 வயது இந்த வயதான தம்பதியினர் மலைவாழ் இனத்தை சார்ந்தவர்கள் எழுத படிக்க தெரியாத அப்பாவிகள் ஆவர், இந்த தம்பதியினருக்கு சொந்தமாக சிறிது விவசாய நிலம் உள்ளது அதில்வேலை செய்து வரும் வருமானத்தில் தனது வாழ்க்கை கழித்து வருகின்றனர்.


இவர்களுக்கு  ஒரு மகள் இருக்கிறார் அவருக்கும் திருமணம் செய்து கொடுத்து வெளியூர் அனுப்பி வைத்து விட்டனர், இந்த நிலையில் இந்த தம்பதியினர் கடந்த 40 ஆண்டுகளாக ரேஷன் அட்டை இல்லாததால் அரசு மூலமாக கிடைக்கும் ரேஷன் பொருட்கள் அரிசி, பருப்பு, எண்ணை மற்றும் அரசின் நல திட்டங்கள் போன்றவற்றை கடந்த 40 ஆண்டுகளாக வாங்க முடியாமல் அவதியுற்று மன வேதனையில் வாழ்ந்து வருகின்றனர்.


இந்த தம்பதியினர் கடந்த 15 ஆண்டுகளாக ரேஷன் அட்டை வாங்குவதற்காக தர்மபுரி மாவட்ட ஆட்சியர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் போன்ற இடங்களுக்கு நடையாய் நடந்தும் வாங்க முடியவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர், இதற்காக தாங்கள் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளையும், வட்டத்தில் உள்ள அதிகாரிகளையும், பலமுறை சென்று மனு கொடுத்தும் இதுவரை தங்களுக்கு ரேஷன் அட்டை கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.


இந்த தம்பதியினருக்கு ஆவாரம்காட்டூர் பகுதியில் வீடு கட்டி வாழ்ந்து வருவதற்கான வீட்டு வரி ரசீதும் ஊராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது, அதேபோல வயதானவரான மாரிக்கு இந்திய அரசின் ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல மாரியின் மனைவியான வெள்ளையம்மாளுக்கு இந்திய அரசால் வழங்கப்பட்ட ஆதார் உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில் இந்தியாவில் வாழ்வதற்கான ஆதார் அட்டை, வீட்டு வரி ரசீது போன்றவை இருந்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த வயதான தம்பதியருக்கு இன்னமும் ரேஷன் அட்டை வழங்கவில்லை.


இதனால் இந்த தம்பதியினர் அரசு வழங்கும் உணவு பாதுகாப்பு திட்டமான ரேஷன் பொருட்களை 65 வயதை அடைந்த போதும் இன்னமும் இவர்களால் வாங்க முடியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர் முன்னேறிய சமூகத்தில் இது போன்ற அவலம் மிகவும் வெட்கக் கோடனது  எனவே மாவட்ட நிர்வாகம் இந்த வயதான தம்பதியரின் கோரிக்கையை பரிசீலனை செய்து உடனடியாக இந்த தம்பதியருக்கு ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884