Type Here to Get Search Results !

விதைப்பந்துகளால் உருவாக்கப்பட்டுள்ளஉலகின் மிக்பெரிய சந்திராயன் 3 விண்கல ஓவியம்...


விதைப்பந்துகளால் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிக்பெரிய சந்திராயன் 3 விண்கல ஓவியம், காடுகள் அழிப்பதை தடுத்து வனங்களை உருவாக்க  புதிய முயற்சி, தருமபுரியிலுள்ள தனியார் கல்லூரி் மாணவிகள் அசத்தல்.


தருமபுரியிலுள்ள தனியார் கல்வி நிறுவனமான பச்சமுத்து கல்வி நிறுவனங்கள் சார்பில், அங்கு பயிலும் மாணவிகள் உலக சாதனைக்காக இந்த முயற்சியினை மேற்கொண்டிருப்பது அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறது.


காடுகள் அழிவதை தடுத்து, புதிய காடுகளை உருவாக்கும் முயற்சியாகவும், விண்ணையும் மண்ணையும் ஆளும் இந்தியா,  சந்திராயன் 3 விண்ணில் ஏவிய வெற்றியை கொண்டாடவும், விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவி்க்கும் இரண்டே நாட்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளால் மூன்று லட்சத்து என்பத்து நான்காயிரம் விதைப்பந்துகளை உருவாக்கி அசத்தியுள்ளனர், உருவாக்கப்பட்டுள்ள இந்த விதை பந்துக்களை பசுமை இந்தியா திட்டத்திற்கு தமிழக அரசிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.


விதை பந்தில், ஆலமரம், அரச மரம், பூவரசன் மரம், வேம்பு, புங்கன்,அத்தி உள்ளிட்ட பல்வேறு விதைகள் விதபை்பந்துக்களில் வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies