Type Here to Get Search Results !

பாலக்கோடு இந்து சமய அறநிலை துறை அலுவலகத்தில் 13 பேருக்கு திருக்கோயில் அறங்காவலராக நியமன ஆணை வழங்கப்பட்டது.


தமிழக அரசு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு  இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 13 திருக்கோயில்களுக்கு பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் 13 நபர் கலை  நியமனம் செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து மாவட்ட அறங்காவலர் அலுவலர் துரை  அவர்கள் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு அறங்காவலர் உத்தரவு ஆணையை  இன்று வழங்கினார். நிகழ்ச்சிக்கு பாலக்கோடு அறநிலைய ஆய்வாளர் துரை முன்னிலை வகித்தார்.


இதில்  சிக்கதோரனபெட்டம் சூத்திரகரகம் கோவில் அறங்காவலராக துரை, செல்லியம்மன் கோவில் அறங்காவலராக முருகன், சிக்காரதனஹள்ளியில் உள்ள தர்மராஜகோவில் கோவில் அறங்காவலராக வெங்கடாசலம், நாமண்டஹள்ளி பசுவண்ணசாமி கோவில் அறங்காவலராக முத்துசாமி,  பெரியானூர் உத்தமகரகம் கோவில் அறங்காவலராக வேணூகோபால்,  கரகூர் தேடுகரகம் கோவில் அறங்காவலராக சாதன், பஞ்சப்பள்ளி பசுவேஸ்வரர் கோவில் அறங்காவலராக சிவக்குமார் உள்ளிட்ட 13உறுப்பினர்களுக்கு அறங்காவலர்  நியமன ஆணை வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பி.எல்.ஆர். ரவி, சரவணன், மாவட்ட திமுகவிவசாய அணி நிர்வாகி சிவம், திமுக மாவட்ட தொண்டர் அணி தலைவர் குமார், விவசாய அணி துணை அமைப்பாளர்  தருமன், மீனவரணி அருள்பிரகாஷ், விளையாட்டு துறை துணை அமைப்பாளர் சக்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies