இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் அறிவிப்பிற்கிணங்க தருமபுரி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அண்ணல் காந்தியடிகள் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டி முறையே 10.10.2023, 12.10.2023, 13.10.2023 ஆகிய நாள்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முற்பகல் 09.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்களுக்கான தலைப்பு-காஞ்சித் தலைவன், அண்ணாவும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாளராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா, கல்லூரி மாணவர்களுக்கான தலைப்பு அண்ணாவும் மேடைபேச்சும், கடமை- கண்ணியம்- கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம், தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்களுக்கான தலைப்பு- வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன், பெரியாரின் சமூகச் சீர்த்திருத்தங்கள், கல்லூரி மாணவர்களுக்கான தலைப்பு- பெரியாரும் பெண் விடுதலையும், சுயமரியாதை இயக்கம், தெற்காசியாவின் சாக்ரடீஸ், தன்மானப் பேரொளி, தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள், அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்களுக்கான தலைப்பு- காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள், வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள், கல்லூரி மாணவர்களுக்கான தலைப்பு- காந்தியடிகள் நடத்திய தண்டியாத்திரை. வெள்ளையனே வெளியேறு இயக்கம். சத்திய சோதனை. மதுரையில் காந்தி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000/-, இரண்டாம் பரிசாக ரூ.3000/-, மூன்றாம் பரிசாக ரூ.2000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும். மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாகத் தொகை ரூ.2000/- வீதம் வழங்கப்பெறவுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி கல்வி இணை இயக்குநர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், பள்ளி மாணவ, மாணவிகள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம். எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

