தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த பெல்ரம்பட்டி காட்டுகொட்டாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜா ( 40) இவருக்கு சொந்தமான தாய் வழி சொத்து 6 ஏக்கர் நிலம் உள்ளது. இவரது தம்பி ராமமூர்த்தி நிலத்தில் பங்கு கேட்டு அடிக்கடி ராஜாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார், இது சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்று வரும் நிலையில், வேண்டும் என்றே மீண்டும் தகராறில் ஈடுபட்டு வருவதும், நிலத்தில் விவசாயம் செய்ய கூடாது, வீட்டில் குடி இருக்க கூடாது என மிரட்டி வந்துள்ளார்.இது சம்மந்தமாக மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் புகார் அளித்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு சில ஆட்கள் உடன் வந்த ராமமூர்த்தி, ராஜா குடியிருக்கும் வீட்டை முற்றிலும் சேதப்படுத்தி வீட்டில் உள்ள பொருட்கள், உணவு தாணியங்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி துவம்சம் செய்தனர்
இதுகுறித்து மீண்டும் மாராண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் திமுக மாநில நிர்வாகி ராஜபாட் ரங்கதுரை என்பவரின் தலையீட்டால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்து வருவதாகவும், கைக்குழந்தையுடன் கனவன் - மனைவி இருவரும் காவல் நிலையத்தில் காத்து கிடப்பதாகவும் மாவட்ட ஆட்சியரும், தமிழக முதல்வரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


