Type Here to Get Search Results !

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) நடத்தும் வங்கி தேர்வில் வெற்றி பெற Veranda Race பயிற்சி நிலையத்தின் மூலம் இலவச பயிற்சிகள்.


தாட்கோ சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரி மாணாக்கர்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) நடத்தும் வங்கி தேர்வில் வெற்றி பெற Veranda Race பயிற்சி நிலையத்தின் மூலம் இலவச பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனைத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்பொழுது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கி மூலம் துணை மேலாளர் பணிக்கான CRPD/PO/2023-24/19 அதிகார பூர்வமான அறிவிப்பு bank.sbi/careers/current-openings என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 


இதன்படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் துணை மேலாளருக்கான 2000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 21 வயது முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Such as B.A., B.Com., B.Sc., B.Tech.,etc.,) முடித்த அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பட்டதாரி மாணாக்கர்களும் 27.09.2023-ஆம் தேதிக்குள் bank.sbi/careers/current-openings என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.


இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும் இப்பதவிக்கான தேர்வு முறையானது முதற்கட்டத் தேர்வு, முதன்மை, நேர்காணல் மற்றும் குழுப் பயிற்சிகள் (Prelims, Mains, Interview and Group Exercises) என மூன்று நிலைகளில் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்வானது 2023-நவம்பரிலும், முதன்மை தேர்வானது 2023-டிசம்பர் மற்றும் 2024- ஜனவரியிலும், நேர்காணல் மற்றும் குழு பயிற்சிகளுக்கான அழைப்பு 2024-ஜனவரி மற்றும் பிப்ரவரியிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இப்பதவிக்கான ஆரம்பகால மாத ஊதியம் ரூ.41,960/- ஆகும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் துணை மேலாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு Veranda Race பயிற்சி நிலையத்தின் மூலம் இலவச பயிற்சியை வழங்க தாட்கோ நிறுவனமானது முடிவு செய்துள்ளது. 


இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலமாக ஏற்கப்படும் என தாட்கோ மேலாண்மை இயக்குநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்புரம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies