Type Here to Get Search Results !

புலம்பெயர்ந்த வெளி மாநிலத் தொழிலாளர்களில் குடும்ப அட்டை இல்லாதவர்கள், புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு e-Shram என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.


தருமபுரி மாவட்டத்தில் உள்ள நிரந்தரமாக புலம்பெயர்ந்த வெளி மாநிலத் தொழிலாளர்களில் குடும்ப அட்டை இல்லாதவர்கள், புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு e-Shram என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

e-Shram இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புலம்பெயர்ந்த வெளிமாநிலத்தவர்கள் தங்கள் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் அம்மனுவின் மீது விசாரணை செய்து மனுதாரர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படும். 


உரிய விசாரனைக்கு பின் தகுதியுள்ள நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டவுடன் (ONORC) ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் பொது விநியோகதிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பெற்று பயன்பெறலாம். எனவே வெளிமாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் இதுவரை குடும்ப அட்டை இல்லாதவர்கள் புதிய குடும்ப அட்டை வேண்டி e-Shram (https://eshram.gon.in) என்ற இணையதனத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.


இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies