தருமபுரி மாவட்டம், அரூர் அருகே கெளாப்பறை அருந்ததியர் காலணியில், 150 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த சுடுகாட்டு வழியை, தனிநபர்கள் விடாமல் கடந்த மூன்று நாட்களாக தடுத்து வந்தனர். தகவல் அறிந்து அந்த இடத்திற்க்குக் சென்ற விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் C.K.சாக்கன் சர்மா அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களிடத்திலும், காவல்துறை, வருவாய்த்துறை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, பிறகு இறந்துபோன சகோதரி சக்குவின் உடலை தானே சுமந்துக்கொண்டு மயானத்திற்க்கு சென்று அடக்கம் செய்தார்.
நிகழ்வில் தொகுதி துணைச்செயலாளர் கேசவன், தெற்க்கு ஒன்றிய துணைச்செயலாளர் தீரன் தீர்த்தகிரி, இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் அரூர் பாஷா, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை ஒன்றிய அமைப்பாளர் சாந்தலிங்கம், குமார்வளவன், ஈழப்பறை முகாம் செயலாளர் மதி, முருகன், ரகு, வீரப்பன், ஆறுமுகம், கனித், கார்திக், செல்வா, சீனிவாசன், தனபால், கொளந்தை, முன்னாள் தலைவர் ராஜீ, AR காலணி காமராஜ், சரவனன், சாமிக்கண்ணு, AMMK கட்சியைச் சார்ந்த முருகன், சபாபதி, ஆதி,மற்றும் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.