Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோடு அருகே ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாண விழா நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள  சாமியார் நகர் கிராமத்தில்  ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் 4ம் ஆண்டு  ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கும் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் திருக்கல்யாண வைபவ திருவிழா நடைப்பெற்றது.


இதனையடுத்து  விக்கிரகத்திற்க்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஏராளனமான பெண்கள் சீர்வரிசை தட்டுடன் ஊர்வலமாக வந்து ஸ்ரீனிவாசா பெருமாளுக்கு  நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர்.


அதனை தொடர்ந்து ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கு ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் மங்கள இசை முழங்க திருக்கல்யாணம் நடந்தேறியது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் ஸ்ரீ சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 


திருமணம் ஆகாத கன்னி பெண்கள், இளைஞர்கள் சுவாமி திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம் இதனால்  விழாவையொட்டி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 


பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் பங்காளிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies