மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் தலைமை வகித்தார்.கணிதத் துறைத்தலைவர் ரா.சதீஷ் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் நா.நாகராஜ் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் சக்திஜோதி மற்றும் மருத்துவர் செ.பாவை ஆகியோர் மாணவர்களிடத்தில் சிறப்புரை ஆற்றினர். கவிஞர் சக்திஜோதி பேசுகையில் ஔவைதான் தகடூர் மண்ணின் மகுடம் ஔவையை நினைத்தாலே வீரம் பிறக்கும், மாணவிகள் தங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய சமூகத்தில் விழிப்புணர்வுடன் மாணவிகள் இருக்க வேண்டும்.
தான் மாணவிகளாக இருக்கும் நீங்கள் தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் மேலும் சமூக ஊடகங்களில் முழங்கால் அதிகமாக புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்றார். நிறைவாக ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி.பரஞ்சோதி நன்றி கூறினார். நிகழ்வில் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.