Type Here to Get Search Results !

பாலக்கோடு திரெளபதிஅம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை வழிபாடு செய்து அன்னதானத்தை துவக்கி வைத்த கே.பி .அன்பழகன் எம்.எல்.ஏ.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஒவ்வொரு ஆண்டும், விநாயகர் சதுர்தியை முன்னிட்டு சித்து விநாயகர் திரி ஸ்டார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் பாலக்கோடு திரெளபதியம்மன் கோவில் முன்பு  விநாயகர் சிலை அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரெளபதிஅம்மன் கோவில் முன்பு கடந்த 18ம் தேதி விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். சாமிக்கு பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. இதில் பாலக்கோடு எம்.எல்.ஏ கே.பி அன்பழகன், பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் பாடி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு   அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.


இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அவைத் தலைவர் தொமு.நாகராசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கே.வி.ரங்கநாதன், நகர செயலாளர் ராஜா, பேளாரஅள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி.எம்.சேகர், திரி ஸ்டார் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள், ஊர்  பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள்  மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கம் அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies