Type Here to Get Search Results !

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு தொடர்பாக மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி - மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.


தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் தெருமுனை  கலைநிகழ்ச்சி  பிரச்சாரம் உள்ளிட்டவற்றை  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று கொடியசைத்து  துவக்கி வைத்தார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் தெருமுனை கலைநிகழ்ச்சி பிரச்சாரம் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (29.09.2023) கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கட்டுபாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால்  தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்காக  பிரத்தியேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக ஆண்ட்ராய்டு  கைபேசி செயலி மூலம் மாற்றுத்திறனாளிகள்  கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு, சமூக தரவு தளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில்  29.09.2023 முதல் 12.10.2023 வரையில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது. 


தருமபுரி மாவட்டத்தில் இன்று (29.09.2023) முதல் நடைபெற்று வரும் கணக்கெடுப்பு பணியினை நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் தடங்கம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும் இக்கணக்கெடுப்பு பணியினை பொதுமக்கள் அறியும் வகையில்  விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மூன்று சக்கர வண்டி விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு பிரச்சார வாகனம்  மற்றும் தெருமுனை கலை நிகழ்ச்சி பிரச்சாரம்  உள்ளிட்டவற்றையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, மாநில உரிமைகள் திட்ட மேலாளர் திரு.பிலிப்ஸ், திட்ட அலுவலர் செல்வி. அனிதா மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies