Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளி அருகே சின்னகும்மனூர் கிராமத்தில் வயிற்று வலியால் எலி பேஸ்ட் தின்ற 17வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி சாவு.


தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சின்ன கும்மனூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வள்ளி, இவரது கணவர் விவேக்  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 17 வயதில் விஸ்வா என்ற மகன் பள்ளி படிப்பை முடித்து வீட்டில் இருந்து வந்தார்.


சிறுவன் குடற்புண் காரணமாக அவ்வப்போது வயிற்று வலி ஏற்பட்டு அவதியடைந்து வந்தார், இந்நிலையில் கடந்த 12ம் தேதி வயிறு வலியால் அவதிபட்ட சிறுவன் எலி பேஸ்ட் தின்று மயக்மடைந்தான், இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 


அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெங்களுரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான், தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies