தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம், அதியமான் கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அதியமான்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் தருமபுரி ஊராட்சி ஒன்றியம், இலக்கியம்பட்டி செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கான அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கல்வி பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் அந்தந்த பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்துக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுகளில், அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சென்றாயன், அதியமான்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி, இலக்கியம்பட்டி செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கான அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சிமேரி, பாமக மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன், அதியமான்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் சா.முருகன், ஒன்றிய தலைவர் சிவபிரகாசம், பசுமைத் தாயக மாவட்ட துணை செயலாளர்கள் தமிழரசன், சரவணன், நிர்வாகிகள் – கணேசன், குப்பன், அர்சுணன், செந்தில் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக