தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் தலைமையில் நாளை நடைபெற இருந்த நிலையில், மாரண்டஅள்ளி திமுக பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் நாங்கள் தான் ஆளும் கட்சி நான் தான் மிதிவண்டி வழங்குவேன், அதுவும் இன்றே இப்போதே வழங்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியரை நிர்பந்தித்து அவசர அவசரமாக மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, மிதிவண்டி வழங்க முற்பட்டனர்.
இதையறிந்த அதிமுக நகர செயலாளர் கோவிந்தன் தலைமையில் திரளான அதிமுகவினர் பள்ளிக்கு சென்று மக்கள் பிரதிநிதி எம்எல்.ஏ.தான் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்க வேண்டும் வேறு யாரும் வழங்க அனுமதிக்க கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளியில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. உடனடியாக மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக