தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஒசூர் வீட்டு வசதி பிரிவின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் மனைகள் / வீடுகள் / அடுக்குமாடி குடியிருப்புகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் மனைகள் / வீடுகள் / அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் ஒதுக்கீட்டிற்கு முழுத் தொகையினையும் செலுத்தியிருந்தால் அதற்குண்டான ஆவணங்களை ஒசூர் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் சமர்ப்பித்து கிரையப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இஆப., தனது செய்தியறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.