இம்மாதம் ஆகஸ்ட் 20ம் தேதி அஇஅதிமுக சார்பில் மதுரையில் எழுச்சி மாநாடு நடைபெறும் எனவும் அது சமயம் திரளான கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொள்ள அதிமுக பொதுசெயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார், அதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் மாநாட்டு வேலைகளில் பரபரப்பாக செயல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியம், நகரம், கிளை கழகம் வரை அழைப்பு விடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக பாலக்கோடு நகர செயலாளர் ராஜா தலைமையில் திரெளபதியம்மன் கோவில் வளாகத்தில் எழுச்சி மாநாட்டு பேனர்களை ஆட்டோக்களில் ஓட்டி எழுச்சி மாநாட்டு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வக்.செந்தில், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், கூட்டுறவு சங்க தலைவர்கள் புதுர் சுப்ரமணி, பாலகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் கோவிந்தசாமி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் சரவணன், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.