Type Here to Get Search Results !

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு.


தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் திரு.வி.கண்ணதாசன் அவர்கள் இன்று தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து நிர்மலா ஆண்கள் மற்றும் பெண்கள் முதியோர் இல்லங்கள், குழந்தைகள் தத்தெடுப்பு மையம், தருமபுரி மாவட்ட சிறைச்சாலை, கிளைச்சிறை, கலங்கரை விளக்கம் அரசு மறுவாழ்வு மையம் உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் திரு.வி.கண்ணதாசன் அவர்கள் இன்று (31.08.2023) தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து நிர்மலா ஆண்கள் மற்றும் பெண்கள் முதியோர் இல்லங்கள், குழந்தைகள் தத்தெடுப்பு மையம், தருமபுரி மாவட்ட சிறைச்சாலை, கிளைச்சிறை, கலங்கரை விளக்கம் அரசு மறுவாழ்வு மையம் உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி நிர்மலா ஆண்கள் மற்றும் பெண்கள் முதியோர் இல்லங்கள் மற்றும் குழந்தைகள் தத்தெடுப்பு மையம், சோகத்தூர் கூட்டுரோடு அருகில் அமைந்துள்ள மாவட்ட சிறைச்சாலை, தருமபுரி மாவட்ட கிளைச்சிறை, கலங்கரை விளக்கம் அரசு மறுவாழ்வு மையம் இவற்றில் உள்ள அறைகள், குளியல் அறைகள், குடிநீர் வசதி, காற்றோட்ட வசதி, கழிப்பறைகள் மற்றும் சமைக்கும் உணவின் தரம் குறித்தும் மேலும் அடிப்படை வசதிகள் குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் திரு.வி.கண்ணதாசன் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் திரு.வி.கண்ணதாசன் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது:- தருமபுரி மாவட்டத்தில் அனைத்து இல்லங்களும், மாவட்ட சிறைச்சாலை, கிளை சிறைச்சாலை இவைகளெல்லாம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை, சிறைத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும், ஒருங்கிணைந்து செயல்படுவதால் அனைத்து இல்லங்களும் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன என்பதை ஆய்வின் மூலம் தெரிந்து கொண்டு, இது குறித்து அறிக்கையினை தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளோம்.


சிறைச்சாலைகளில் அறைகள் தூய்மையாக‌ உள்ளதா என்பதையும், குடிநீர் வசதி, காற்றோட்ட வசதி, உணவின் தரம் இவற்றையெல்லாம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம். சிறைச்சாலைகளில் மிக நீண்ட காலம் இருக்கக்கூடிய சிறைவாசிகளுக்கு உரிய சட்ட உதவிகள், உறவினர்கள் தரக்கூடிய செய்திகள் இவை எல்லாம் முறையாக சென்று அடைகின்றதா என்பது குறித்தும் கேட்டறிந்தோம். குறிப்பாக சிறைவாசிகள் குற்றச்சாட்டும் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.


தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைச்சாலைகள் மற்றும் கிளை சிறைச்சாலைகளில் குறைந்த எண்ணிக்கையில் சிறைவாசிகள் உள்ளனர். அதனால் இட நெருக்கடி என்பது கிடையாது. மனித உரிமை அடிப்படையில் தத்துமையம், இல்லங்களில் ‌உள்ள முதியோர்கள், சிறுவர்கள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் சிறப்பாக செயல்பட மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும். இவ்வாறு மாண்புமிகு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் திரு.வி.கண்ணதாசன் அவர்கள் தெரிவித்தார்கள்.


இந்த ஆய்வின் போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் திரு.செல்வம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies