Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே திருமல்வாடி கிராமத்தில் உலக ஆதிவாசிகள் தின விழா முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்பு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள திருமல்வாடி கிராமத்தில் உள்ள சமுதாய திருமன மண்டபத்தில் தமிழக ஆதிவாசிகளின் வளர்ச்சி கூட்டமைப்பு சார்பாக உலக ஆதிவாசிகளின் தின விழா மாநில தலைவர் ஆறுமுகம்காணி தலைமையில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சதாசிவம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்ரமணி, பிரகாஷ், நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசியதாவது. அதிமுக ஆட்சியில் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்து கொடுத்தும், அங்குள்ள மாணவ-மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கும் உறுதுனையாக இருந்தது அம்மா அரசு என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து மாநில எஸ்.சி, எஸ்.டி ஆனைய உறுப்பிணர் பேசும் போது தொழில் தொடங்க மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மானியத்துடன் கூடிய கடன் பெற்று தொழில் தொடங்கவும், இளைஞர்கள் மத்திய மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள் மற்றும் தொழில் வாய்ப்புக்களை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வெங்கடாசலம், ஆறுமுகம், சீனிவாசன், சேத்தான், திருநா, நந்தினி உள்ளிட்ட ஏராளமான மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies