பாலக்கோட்டில் ஈஷா கிராமோத்சவ சார்பில் தென்னிந்திய அளவிலான மாபெரும் கிராமிய விளையாட்டு போட்டி திருவிழாவை கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஈஷா கிராமோத்சவ சார்பில் தென்னிந்திய அளவிலான மாபெரும் கிராமிய விளையாட்டு போட்டி திருவிழாவை கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.
ஈஷா மையம் சார்பில் தென்னிந்திய அளவில் போட்டிகள் நடைபெறுவதை தொடர்ந்து ஒன்றிய அளவிலான போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்நிகழ்ச்சிக்கு பாலக்கோடு டி.எஸ்.பி.சிந்து முன்னிலை வகித்தார், மண்டல ஒருங்கினைப்பாளர் டாக்டர்.சோமசுந்தரம், நகர கைப்பந்து குழு தலைவர் பீர்ஷா, நகர கைப்பந்து குழு செயலாளர் கார்த்திக், ஈஷா யோகா மைய தன்னார்வலர்கள் ராம் தேவ், சரவணன், விஜயராணி, முரளி, சிவா, மற்றும் பாலக்கோடு பி.வி.சி கைப்பந்து குழுவினர் நிர்வாகிகள் உள்ளிட்ட இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.