Type Here to Get Search Results !

ஜிட்டிகான்கொட்டாய் கிராமத்தில் தீராத வயிற்று வலியால் விரக்தியில் விவசாயி தூக்குபோட்டு தற்கொலை.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜிட்டிகான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தன் (50) இவருக்கு 2 மகன்கள் ஒரு மகன் உள்ளனர்.


கோவிந்தனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகாததால் விரக்தியில் இருந்தவர், நேற்று அவரது விவசாய நிலத்தில் உள்ள புளிய மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


சம்பவ இடத்திற்க்கு வந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ் உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies