Type Here to Get Search Results !

இந்திய விமானப் படையின் அக்னிவீர் வாயு விமானப்படை திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு தேர்விற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.


இந்திய விமானப் படையின் அக்னிவீர் வாயு விமானப்படை திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு தேர்விற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.


இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது, இந்திய விமானப் படையின் அக்னிவீர் வாயு விமானப்படை திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு தேர்விற்கான பதிவு இணையவழியில் கடந்த 27.07.2023 அன்று முதல் நடைபெற்று வருகின்றது. விண்ணப்பிக்க கடைசி தேதி 17-08-2023 ஆகும். அக்னிவீர்வாயு தேர்வுக்கு 27.06.2003 முதல் 27.12.2006 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார். 


இத்தேர்வுக்கு 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், ஆட்டோமோட்டிவ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி) மூன்றாண்டு டிப்ளமோ படிப்புகளில் மொத்தம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஆர்வமுள்ள இளைஞர்கள் https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், தகவல்களுக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அக்னிவீர் வாயு விமானப்படை தேர்வில் பங்கு பெற்று பயன் பெறலாம், என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies