Type Here to Get Search Results !

மை தருமபுரி அமைப்பின் அமரர் சேவை மூலம் இரண்டு ஆதரவற்ற உடல் நல்லடக்கம் செய்யப்பட்டனர்.


தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி ரயில்வே நிலையம் அருகே ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க ராமமூர்த்தி ரெட்டி என்பவர் ஆதரவற்று இருந்துள்ளார். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட இவரை சமூக ஆர்வலர் வைத்தியலிங்கம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரை பற்றி விசாரித்ததில் இவரின் உறவினர்கள் யாரும் வரவில்லை. 

இதுப்போல் கிருஷ்ணகிரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் 65 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் இறந்துள்ளார். இவரை பற்றி விசாரித்ததில் உறவினர்கள் யாரும் வரவில்லை. கிருஷ்ணகிரி அறம் சிகரம் கோபிநாத் அவர்களின் உதவியால் கிருஷ்ணகிரி காவல்துறையினர் மூலம் தருமபுரி பச்சையம்மன் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.


கிருஷ்ணகிரி காவல் நிலைய காவலர் முருகன், மாரண்டஹள்ளி காவல் நிலைய காவலர்‌ வடிவேல், மை தருமபுரி அமைப்பினர் சதீஸ் குமார் ராஜா, தமிழ்செல்வன், அலெக்சாண்டர், சண்முகம் ஆகியோர் இரண்டு புனித உடல்களுக்கும் இறுதி மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 56 புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies