Type Here to Get Search Results !

கோட்டப்பட்டி அடுத்த சிட்லிங் பகுதிகளில் காவல்துறையினர் -கள்ள சாராயம் ஒழிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோட்டப்பட்டி அடுத்த சிட்லிங் பகுதிகளில் காவல்துறையினர் -கள்ள சாராயம் ஒழிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட சிட்லிங் பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் உத்தரவின் படி கோட்டப்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் சிட்லிங் பகுதிகளில் கள்ள சாராயம் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


இதில் கள்ள சாராயம் காட்சிபவர்கள் விற்பனையாளர்கள் வெளியூருக்கு எடுத்துச் செல்பவர்கள் பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தால் கோட்டப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கும்படி கோட்டப்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் கேட்டுக் கொண்டார் இதில் உதவி ஆய்வாளர் விஜயன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies