Type Here to Get Search Results !

தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் தொடர்பான மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு.


தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) ஓர் அரசு நிறுவனம் ஆகும். இதன் மூலம் அனைத்து கிராம ஊராட்சிகளின் கிராம சேவை மையம் மூலம் 1 GBPS வேகத்தில் இணையதள இணைப்பு அனைத்து கிராமங்களுக்கும் வழங்கப்பட உள்ளது. தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை,  அதிவேக இணைய சேவை மூலம் பொதுமக்களுக்கு வருவாய்த் துறையில் பெறப்படும் சான்றிதழ்கள் உடனடியாக கிடைக்கவும், பொது விநியோக கடைகளில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் உடனுக்குடன் பெறவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பயனாளிகளுக்கு விரைவாக கூலித்தொகை கிடைக்கவும், இன்னபிற அரசு அலுவலக சேவைகள் உடனுக்குடன் பெறவும் வழிவகுக்கிறது.


இணையதள இணைப்பு வசதி செய்துதரும் பொருட்டு தற்பொழுது தமிழ்நாடு மின் வாரிய மின் கம்பங்களின் மூலமாக கேபிள்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இக்கேபிள்கள் கண்ணாடி இழைகளால் ஆனது என்பதால் மின்சாரம் கடத்தாது. தமிழ்நாடு மின்வாரிய மின்கம்பங்களின் மூலமாக கொண்டு செல்ல தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலைத் துறை, வனத்துறை, இரயில்வே துறை ஆகிய சம்பந்தப்பட்ட துறைகளிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.


கண்ணாடி இழை கேபிள்கள் கொண்டு செல்லும் கம்பங்கள் தங்கள் விளைநிலங்களின் வழியே செல்வதாக தெரிவித்து விவசாயிகள் / தனிநபர்கள் எவரும் தடுக்கக்கூடாது. கண்ணாடி இழை கேபிள்கள் செல்வதை வேண்டுமென்றோ, தன்னிச்சையாகவோ வெட்டிவிட பொதுமக்கள் யாரும் முயற்சி செய்யக்கூடாது. கோவில் திருவிழாக்களின்போது முன்கூட்டியே சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies