தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த சூடானுர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிராஜ் என்பவரின் மகன் நவீன் (வயது .30) இவர் சூடானூரில் உள்ள தனது நெல் வயலில் இரவு நேரங்களில் காட்டு பண்றி புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வந்ததால், நேற்றிரவு காட்டு பன்றிகளை கொல்ல நெல்வயலை சுற்றி திருட்டுதனமாக மின்வேலி அமைத்தார்.
அப்போது எதிர்பாரத விதமாக மின்வேலியில் சிக்கி நவீன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் நவீன் மின் வேலியில் சிக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் மின்சாரத்தை துண்டித்து உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

.gif)

