Type Here to Get Search Results !

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 100க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழக அரசு சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டை ஊதியம் வழங்கப்படுவதாகவும் அதை மாற்றி ஒரே விதமாக ஊதிய வழங்கக் கோரியும், 37வருடங்களாக தினக்கூலியாக வேலை செய்யும் தொழிலாளர்களை நிரந்தர பணி வழங்க கோரியும், மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு உடனடியாக சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய வழங்க கோரி கண்டன கோஷங்கள் தமிழக அரசுக்கு எதிராக எழுப்பினர். 


இந்த நிகழ்ச்சியில் தலைமை முருகன் அண்ணா தொழிற்சங்க செயலாளர் தலைமையில் நடைபெற்றது. முன்னிலை கலையரசன், முருகன், என்.சி.முருகன், மாது, மாதேஷ், சக்திவேல், கே.முருகன், நாகராஜ் மற்றும் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies