Type Here to Get Search Results !

பாலக்கோடு மத்திய ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கையை ஆய்வு செய்த மாவட்ட செயலாளர்.


தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த தலைமைக் கழகம் சார்பில் 1 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணைத்துள்ள நிலையில் மாவட்டம் முழுதும் உள்ள பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில்  மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்கள் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பேரூர் கழகச் செயலாளர்களை அதிகப்படியான புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து முழு நேரமாக உறுப்பினர் சேர்க்கையை ஆய்வு செய்து வருகிறார்.  

அதனையோட்டி பாலக்கோடு மத்திய ஒன்றியம் அமானி மல்லாபுரம், செம்மன அள்ளி,சீரியம்பட்டி, உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் நடந்த புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்வை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இதில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர் படிவங்களை ஒன்றிய கழக செயலாளர் முனியப்பன் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் வக்கீல் மணி, ராஜகுமாரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், பொதுக்குழு உறுப்பினர் சையத் முர்த்துஜா, மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், மாவட்ட விவசாய அணி ரவி, விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர்  ஆனந்தன், அவைத் தலைவர் இராஜாமணி, சுற்றுச்சூழல் அணி செழியன், கவுன்சிலர் கார்த்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் சேட்டு (எ) சேகர், ஜ.டி விங்க் தமிழரசன், ஆதம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies