Type Here to Get Search Results !

ஓட்டுனர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிடவேண்டும், தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை.


தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்ட தலைவர் மாதுராஜ்  தலைமை தாங்கினார்.  மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் முன்னிலை வகிக்க,  மாவட்ட செயலாளர் இஸ்மாயில் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். 


இந்த ஆர்ப்பாட்டத்தில்,  15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வழங்கிட வேண்டும், அனைத்து துறைகளிலும் உள்ள ஓட்டுநர் காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும், ஓட்டுனர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், ஓட்டுனர்களுக்கு தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தம் அமல்படுத்திட வேண்டும் போன்ற 5 அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies