தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த சிந்தல்பாடி அருகே உள்ள சி.பள்ளிப்பட்டி கிராமத்தில் கடந்த இரு தினங்களாக மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவையொட்டி நேற்று இரவு சாமி ஊர்வலம் நடைபெற்றது, சாமி அலங்கரித்து டாடா ஏசி மினி லாரியில் வைத்து பொதுமக்கள் ஊர் வலம் எடுத்து சென்றனர்.மினி லாரியை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ராகவேந்திரன்,26 என்பவர் ஓட்டி சென்றார், வீதி உலாவில் வான வேடிக்கைகள் நிகழ்த்த பட்டாசுகள் வெடித்தனர்.
மேலும் வெடிப்பதற்காக பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்கள் அதிகளவில் டாடா ஏசி மினி லாரியில் வைத்திருந்தனர். ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது பட்டாசு மின் கம்பத்தில் பட்டு மீண்டும் டாட்டா ஏசி மினி லாரியில் விழுந்தது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது, டாடா ஏசியும் தீப்பற்றி எரிந்தது.
இதில் ராகவேந்திரன், நொச்சிப்பட்டியை சேர்ந்த கோவிந்தன் மகன் ஆதி,50.ஆகியோர் படுகாயம் அடைந்தனர், அங்கு நின்றிருந்த அசோகன் மகன் ஆகாஷ்,(7) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ராகவேந்தின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து மொரப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.gif)

