துவக்கி வைக்கப்பட்டு சில தினங்களே ஆன சூழ்நிலையில், கடந்த 2 நாட்களாக அந்த லிஃப்ட் செயல்படாமல் முடங்கியுள்ளது. இதனால் பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 2வது நடைமேடைக்கு செல்ல மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக மின் தூக்கி செயல்படாமல் உள்ளது. விரைவில் அதை சரி செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம் என்று கூறினார்.
பல லட்சங்கள் செலவு செய்து தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரால் துவக்கி வைக்கப்பட்ட மின் தூக்கி, துவக்கி வைக்கப்பட்டு சில தினங்களிலேயே செயலிழந்துள்ளது. அப்படியானால் அதனுடைய தரம் எந்த அளவு இருக்கும்? அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதியோ தனது சொந்த வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ இந்தளவு தரமுள்ள பொருட்களை பயன்படுத்துவார்களா? என ரயில் நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் சிலர் புலம்பியவாறு சென்றனர்.
.gif)

